close
Choose your channels

பீச் ரிசார்ட்டில் ரசிகர்களை கிறங்க வைத்த பிக்பாஸ் நடிகை

Saturday, November 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினை காதலித்ததன் மூலம் முதலில் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சாக்சி அகர்வால். பின்னர் திடீரென கவினின் கவனம் லாஸ்லியா மீது சென்றதால் கவினுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் வில்லியாக மாறியதால் அவர் 6வது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இறுதிவரை சென்ற லாஸ்லியா, ஷெரினை விட சாக்சிதான் தற்போது திரைப்படங்களில் அதிக வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது ஆர்யா நடித்து வரும் ‘டெடி’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பீச் ரிசார்ட் ஒன்றில் சாக்சி அகர்வால் சமிபத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலது பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சேலை உள்பட விதவிதமான காஸ்ட்யூம்களில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் கவர்ச்சியாகவும் இளசுகளை கிறங்க வைக்கும் அளவிற்கு இருப்பதாகவும் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பொதுவாக நடிகைகள் தங்களது மார்க்கெட்டுக்களை விரிவாக்க அவ்வபோது போட்டோஷூட் எடுப்பது வழக்கம். இந்த பீச் ரிசார்ட் போட்டோஷூட் அவரது கேரியருக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.