close
Choose your channels

பிரபுதேவா படத்தின் டப்பிங் பணியை முடித்த 'பிக்பாஸ்' நடிகை: வைரல் புகைப்படம்

Friday, March 19, 2021 • தமிழ் Comments

பிரபுதேவா நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிக்பாஸ் நடிகை அந்த படத்தின் டப்பிங் பணியை முடித்து உள்ளதாக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாகீரா’. பிரபுதேவா ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த படத்தின் டீசரை நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியிட்டார் என்பதும் இந்த டீசர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால் தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூறி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Get Breaking News Alerts From IndiaGlitz