'தல' மனைவி டுவீட்டுக்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்த முதலமைச்சர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியின் மனைவி சாக்சி டுவிட்டரில் பதிவு செய்த ஒரு டுவிட்டுக்கு ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் தினமும் 5 மணி முதல் 7 மணி நேரம் வரை மின்வெட்டு இருந்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளதாகவும், தற்போது நடக்கும் மின்வெட்டுக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தினமும் நடக்கும் இந்த மின்வெட்டு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் சாக்ஸி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் இந்த டுவீட்டை ரீடுவீட் செய்ததை அடுத்து, சாக்சியின் டுவீட் வைரலானது. இதனை அடுத்து ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுவர்தாஸ் அவர்கள் உடனடியாக சாக்ஸியின் டுவிட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டேக் செய்து, உடனடியாக இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சாக்ச்யின் டுவீட்டுக்கு ஜார்கண்ட் முதல்வர் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்துள்ளதால் இனிமேல் அந்த பகுதியில் மின்வெட்டு இருக்காது என்று கருதப்படுகிறது