17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்

  • IndiaGlitz, [Thursday,May 28 2020]

விதவைத் தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் அவரது 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சேலம் அம்மாபேட்டையில் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கணவர் இறந்ததால் தனது 17 வயது மகள் மற்றும் மகனை காப்பாற்றுவதற்காகவே துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக்குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் 17 வயது மகள் மீது ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்குமார் பார்வை பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த அந்தப் பெண் அசோக்குமாரை துரத்தி அடித்து விட்டார். இதனால் ஆத்திரமான அசோக்குமார் அந்த பெண்ணுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த குமார் என்பவருடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அந்தப் பெண் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 17 வயது சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்

இதுகுறித்து தகவல் அறிந்த அந்தத் பெண் சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் அசோக்குமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்

விதவைத் தாயுடன் கள்ளக்காதலில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அவரது மகளை நண்பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

More News

இரு நாடுகளுக்கு இடையே நடந்த “100 ஆண்டு போர்” பற்றி தெரியுமா??? சுவாரசியம் நிறைந்த கதை!!!

இன்றைய காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே ஒரு போர் சூழல் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பாட்டு எப்படி இருக்கு? கோவிந்த் வசந்தாவிடம் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்ட கேள்வி

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் தமிழ் திரையுலகில் உலகில் மட்டுமன்றி இந்திய திரையுலகிலும் ஹாலிவுட்டிலும் பிரபலமானவர் என்பது தெரிந்ததே.

தெலுங்கு தேசத்தில் சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிக்கட்டி பறந்த என்.டி.ஆர் பிறந்த தினம் இன்று...

என்.டி.ஆர் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தெலுங்கு திரைப்பட நடிகரும்,

எங்க நாட்டைச் சுற்றிப் பார்க்க வாங்க... ஒருவேளை கொரோனா வந்தா செலவை நாங்க ஏத்துக்கிறோம்!!! டீலிங்க் பேசும் நாடு!!!

கொரோனா பாதிப்பினால் உலகச் சுற்றுலாத் துறையே ஸ்தம்பித்து இருக்கிறது.

மோசமான வானிலை காரணமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பவிருந்த அமெரிக்கா விண்கலம் நிறுத்தப் பட்டது!!!

அமெரிக்காவின் தனியார் நிறுவனமான SpaceX நிறுவனம் தயாரித்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு பேர் நேற்று, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட இருந்தனர்.