இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தவருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட போலீசார்

சேலத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததோடு, அவர்களை பாலியல் தொழிலுக்கும் கட்டாயப்படுத்தியதாக மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நண்பர்களின் உதவியோடு ஆதரவற்ற பெண்கள், பண ஆசையுடன் இருக்கும் இளம்பெண்கள் ஆகியோர்களை குறிவைத்து அவர்களுக்கு பண ஆசை காட்டி பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தி உள்ளனர். மேலும் சிலரை ஆபாசமாக படம் எடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி பெண்களோடு உல்லாசமாக இருந்த சில தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை செய்த 25 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

ஒரு மனிதனை நரபலி கொடுத்தால் கொரோனா கட்டுப்பாடுக்குள் வரும்!!! கோவில் பூசாரியின் விபரீத முடிவு!!!

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தைச் சார்ந்த பூந்தவஹீதா என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேவி கோயில் பிராமணதேவி கோவில் என அழைக்கப் படுகிறது.

கொரோனா பிரச்சனையால் 112 செய்தித்தாள் நிறுவனங்களை நிறுத்தப் போகும் தொழிலதிபர்!!! திடுக்கிடும் தகவல்!!!

ஆஸ்திரேலியாவில் செய்தித்தாள் நிறுவனங்களை கிளைப்பரப்பி இருக்கும் ஒரு பெரிய நிறுவனம்தான் The Garp Australia.

திநகர் ரெங்கநாதன் தெரு 150 கடைகளை மூட உத்தரவு: சென்னை மாநகராட்சி அதிரடி

கொரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காம்ப்ளக்ஸ் கடைகள் தவிர தனிக் கடைகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.

தந்தை உயிரை காப்பாற்ற கல்லீரல் தானம் கொடுத்த 25 வயது இளம் இயக்குனர்

மலையாள திரையுலகில் 23 வயதில் இயக்குனராகி தற்போது முன்னணி இயக்குனர் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆதின் ஒல்லூர் என்பவர் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் கொடுத்து

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எடுத்துக்கொண்ட பிறகு அதிபர் ட்ரம்ப் முற்றிலும் நலமாக இருக்கிறார்!!! வெள்ளைமாளிகை அறிவிப்பு!!!

மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனா சிகிச்சைக்கு பாதுகாப்பானது அல்ல என்று உலகச் சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது