close
Choose your channels

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சல்மான்கானின் அடுத்த படம்! நாயகி காத்ரினா கைஃப்!

Saturday, October 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தாண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ மற்றும் கார்த்தி நடித்த ’சர்தார்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் நிலையில் சல்மான்கான் நடித்த ’டைகர் 3’ என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான் கான், காத்ரீனா கைப் நடிப்பில் மனீஷ் ஷர்மா இயக்கத்தில் உருவான ’டைகர் 3’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி அரும் இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

ஏற்கனவே இதே யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தான் கடந்த 2012ஆம் ஆண்டு ‘ஏக் தா டைகர்’ என்ற படத்தையும், 2017ஆம் ஆண்டு ‘டைகர் ஜிந்தா ஹை’ ஆகிய படங்களையும் தயாரித்தது என்பதும் இரு படங்களும் சூப்பர்ஹிட்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ’டைகர் 3’ ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.