ரூ.1.84 கோடி காரை பரிசாக பெற்ற விஜய் பட வில்லன்: பரிசு கொடுத்தது யார் தெரியுமா?

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த திரைப்படத்தின் இயக்குனர் அல்லது ஹீரோவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் கார் பரிசாக அளிப்பது கோலிவுட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் நாயகன், தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருக்கு ரூபாய் 1.8 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த காரை பரிசாக கொடுத்தது நடிகர் சல்மான்கான் என்பதும் பரிசாகப் பெற்றவர் நடிகர் கிச்சா சுதீப் என்பதும் இவர்கள் இருவரும் ’தபாங் 3’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், கிச்சா சுதீப் நடித்த ’தபாங் 3’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பாக நடித்த கிச்சா சுதீப்புக்கு தகுந்த பரிசு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்த நடிகர் சல்மான் கான், கிச்சா சுதீப்புக்கு ரூபாய் 1.84 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசளித்ததோடு அவருடைய வீட்டிற்கே சென்று அந்த காரை வழங்கி உள்ளார்.

சல்மான் கானையும் அவர் கொண்டுவந்த காரையும் பார்த்து ஆச்சரியம் அடைந்த கிச்சா சுதீப், அவருக்கு நன்றி தெரிவித்ததோடு இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சல்மான்கான் தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருக்கு ரூபாய் 1.84 கோடி மதிப்புள்ள காரை பரிசாக அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கிச்சாசுதீப், விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மத்திய அரசுக்கு எதிராக 25 கோடி பேர் பங்கேற்றுள்ள பாரத் பந்த்..! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த சுமார் 25 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well சொன்ன டிரம்ப்...!

ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு all is well என ட்வீட் செய்துள்ள டிரம்ப்.

சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அளித்த ஒருநிமிட பேட்டி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தர்பார் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சுலைமானி உடல் அடக்கம்..அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி பறந்த ஈரான் ஏவுகணைகள்..!

ஈராக் இராணுவ தளபதியான சுலைமானியின் இறப்புக்கு காரணமான அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

தலைவர் பேனருக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவணும்.. சேலத்திலிருந்து ரஜினி ரசிகர்.

தர்பார் படத்தின் முதல் நாள் கொண்டாட்டத்தில் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் ரஜினியின் கட்டவுட்டிற்கு பூ தூவ திட்டமிட்டிருக்கிறார் சேலத்தை சேர்ந்த கனகராஜ்.