close
Choose your channels

'கார்த்தி 18' படத்தில் இணைந்த இளம் இசையமைப்பாளர்

Friday, December 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிக்கும் 18வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது என்பதையும் இந்த படத்தை 'மாநகரம்' படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பதையும் நேற்று பார்த்தோம்.

நாயகியே இல்லாமல் முழுநீள ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்த த்ரில் படத்திற்கு பின்னணி இசை என்பது மிக முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'விக்ரம் வேதா' உள்பட பல திரைப்படங்களுக்கு சூப்பராக இசையமைத்த சாம் சிஎஸ் இந்த படத்தில் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் தான் இணைந்ததை சாம் சிஎஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யாசூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.