இந்தி திரையுலகிற்கு செல்லும் சாம் சிஎஸ்.. பிப்ரவரி 17ல் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,February 15 2023]

’விக்ரம் வேதா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தற்போது இந்தி வெப் சீரிஸ் ஒன்றுக்கு இசையமைத்திருப்பதாகவும் அந்த வெப் சீரிஸ் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விக்ரம் வேதா’ வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளர் கைதி, அடங்கமறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி உள்பட பல தமிழ் படஙக்ளுக்கும், தெலுங்கு மலையாள படங்களுக்கும் இசையமைத்தார். மேலும் விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் தயாரானபோது, அதற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் தயாராகியுள்ள ’தி நைட் மேனேஜர்’ என்ற வெப் சீரியஸ்க்கு சாம் சிஎஸ்இசையமைத்துள்ளார். ’பொன்னின் செல்வன்’ படத்தில் நடித்த சோபிதா துலிபாலா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த தொடரில் பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. இத்தொடர் மூலம் இந்தியிலும் சாம் சிஎஸ் பிரபலமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

40 வயதிலும் கிளாமரில் கலக்கிய விஜய், விஷால் பட நடிகையின் புதிய பட அறிவிப்பு..!

விஜய், விஷால் படங்கள் உள்பட பல படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு தற்போது 40 வயது ஆகி வரும் நிலையில் இந்த வயதிலும் அவர் தனது சமூக வலைதளத்தில்

இன்னொரு தேசிய விருது உறுதி: 'வாத்தி' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த 'வாரிசு' பிரபலம்..!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என 'வாரிசு' இயக்குனர் வம்சி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

ஒரு வழியாக காதலரை அறிவித்தார் பிக்பாஸ் ஆயிஷா.. திருமணம் எப்போது?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா கடந்த சில நாட்களாக காதலித்து வரும் நிலையில் அவர் தனது காதலரை முதல் முறையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளார். 

காதலர் தினத்தில் கணவருக்கு மெட்டி அணிவித்த தமிழ் நடிகை..!

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்று கவிஞர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி சினேகன் - கன்னிகா திருமணம் நடைபெற்றது

சென்னை திரும்பினார் அஜித்.. 'ஏகே 62' அறிவிப்பு எப்போது?

அஜித் நடிக்க இருக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் அஜித்தின் 62 ஆவது படத்தை மகிழ்