close
Choose your channels

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இணைந்த 'விக்ரம் வேதா' டெக்னீஷியன்!

Friday, July 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது என்பதும், முத்தையா முரளிதரன் கேரக்டரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்க போவதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார் என்பதால் இந்த டைட்டில் இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்

மேலும் இந்த படத்தில் இசையமைக்க இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ’விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், லாக்டவுன் முடிவடைந்து படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி கொடுத்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய்சேதுபதியை ஒரு சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன என்றாலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவே தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.