சமந்தாவுக்கு கிடைத்த 'சுதந்திரதேவி' கேரக்டர்

  • IndiaGlitz, [Thursday,July 26 2018]

திருமணத்திற்கு பின்னரும் பிசியாக இருந்து வரும் சமந்தா, சிவகார்த்திகேயனுடன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்காக சமந்தா, சிலம்பம் கற்றார் என்ற செய்தி ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சமந்தா இந்த படத்தில் சிலம்பம் கலையை கற்றுத்தரும் மாஸ்டராக நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சமந்தா கேரக்டரின் பெயர் 'சுதந்திரதேவி' என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படத்தில் வித்தியாசமான இந்த கேரக்டரில் இதுவரை எந்த நடிகையும் நடித்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக சிலம்பம் கற்க, சமந்தா மூன்று மாதங்களில் 15 பயிற்சி வகுப்புகளில் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார்.

More News

அரசியல் குறித்து கருத்து சொல்ல தகுதியற்றவர் கமல்ஹாசன்: ஹெச்.ராஜா

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தலைவர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் வெற்றிப்பட நாயகி

கடந்த ஆண்டு வெளியான 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான ஷாலினி பாண்டே,

பிக்பாஸ் ஆரவ் படத்தின் டைட்டில் குறித்த தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். ஆரவ்வும் ஓவியாவும் காதலிப்பதாக கூறப்பட்டாலும்

'சர்கார்' படத்தின் மொத்த வாய்ப்பையும் பெற்ற பிரபலம்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'ஆளப்போறான் தமிழன்' பல சாதனைகள் புரிந்தது என்பது தெரிந்ததே. இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்

ஆகஸ்ட் 3-ல் வெளியாகிறது ஜோதிகாவின் அடுத்த படம்

ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் தமிழில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது