நயன்தாரா நடித்த முக்கிய கேரக்டரில் சமந்தா?

  • IndiaGlitz, [Saturday,September 19 2020]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ’மாயா’ மற்றும் டாப்ஸி நடித்த ’கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் அடுத்த படத்தில் சமந்தா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தா நடிக்கும் கேரக்டர் குறித்த தகவல் கசிந்துள்ளது. முதல்முறையாக இந்த படத்தில் சமந்தா மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாககூறப்படுகிறது. காது கேட்காத மாற்றுத்திறனாளியாக சமந்தா இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் கேரக்டருக்காக சமந்தா ஆன்லைன் மூலம் பயிற்சி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 'நானும் ரெளடிதான்’ படத்தில் நயன்தாரா காது கேட்காத மாற்றுத்திறனாளியாக நடித்திருந்த நிலையில் தற்போது சமந்தாவும் அதேபோன்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும் இந்த படத்தை சோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்காக ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

More News

பாலாவின் அடுத்த படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்!

தேசிய விருது பெற்ற பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் ரிலீஸாகாத நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: மும்பை – சென்னை மோதல்

மும்பையைச் சமாளிக்குமா சென்னை?

விஜய்சேதுபதி-டாப்ஸி படத்திற்கு ஹாலிவுட் பட டைட்டில்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி ஆகிய இருவரும் நடித்து வரும் திரைப்படத்தை பழம்பெரும் இயக்குநர் சுந்தரராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வருகிறார்

இந்தக் காலத்திலுமா… பெண்ணாக இருப்பதால் ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்ட சம்பவம்!!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியில் ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற பெண்மணி ஒருவருக்கு அவரது பாலினத்தைச் சுட்டிக்காட்டி ஓட்டுநர்

சர்வாதிகாரத்துக்கு ஒரு எல்லையே இல்லையா? கொரோனா விஷயத்திலும் பகை பாராட்டும் வடகொரியா!!!

உலகத்தின் பார்வையில் இருந்து எப்போதும் ஒளிந்து கொண்டே இருக்கும் வடகொரியா கொரோனா