close
Choose your channels

கொரிய படத்தின் ரீமேக் படத்தில் சமந்தா!

Friday, January 11, 2019 • தமிழ் Comments

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் சமந்தா கடந்த ஆண்டு ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா, யூடயர்ன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். மேலும் விஜய்சேதுபதியுடன் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ்  திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'மிஸ் கிரான்னி' என்ற கொரிய மொழி படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. ஒரு 70 வயது பெண்ணின் ஆவி 20 வயது பெண்ணின் உடலில் புகுந்து ஏற்படுத்தும் அட்டகாசம் தான் இந்த படத்தின் கதை.

இந்த படத்தில் 20 வயது பெண் கேரக்டரில் சமந்தாவும், 70 வயது பெண் கேரக்டரில் நடிகை லட்சுமியுடன் நடிக்கவுள்ளனார். மேலும் இந்த படத்தில் நாக செளரியா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

 

Get Breaking News Alerts From IndiaGlitz