சமந்தா- நாகசைதன்யா ஆடிய டான்ஸ்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,September 04 2019]

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் அவர் நாக சைதன்யாவுடன் ஆடிய டான்ஸ் வீடியோ ஒன்று அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை மில்லியன் கணக்கானோர் பார்வையிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றில் ‘We will, we will rock you’ என்ற பாடலுக்கு ஆயிரக்கணக்கானோர் டான்ஸ் ஆட, அவர்களுடன் இணைந்து சமந்தாவும், நாகசைதன்யாவும் ஆடிய காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது

சமீபத்தில் ‘ஓ பேபி’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்த சமந்தா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ‘96’ ரீமேக் படத்தில் த்ரிஷாவின் ஜானு கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் அவர் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது