விவாகரத்து குறித்து சமந்தாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,October 02 2021]

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் சமந்தா இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது: ’நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இருவரும் கணவன் மனைவியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஒரு சில ஆண்டுகள் நாங்கள் நல்ல நட்பை பெற்றிருந்தோம். எங்கள் உறவின் முக்கியமான அம்சமாக இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையே ஒரு சிறப்பான பிணைப்பை எப்போதும் வைத்து இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும். நலன்விரும்பிகள், ஊடகங்கள் எங்கள் தனிப்பட்ட விவகாரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்’ என்று சமந்தா கூறியுள்ளார்.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிய போவதாக வெளிவந்து கொண்டிருந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விசா வாங்குவதற்காக வெளிநாட்டவரை திருமணம் செய்த ரஜினி பட நாயகி!

வெளிநாட்டிற்கு அடிக்கடி செல்லும்போது எளிதில் விசா வாங்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டு நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக ரஜினி பட நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஷ்கரன் அவர்களின் லைகா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ரஜினிகாந்த் மகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக

இந்த 20 பேர்களில் பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கியிருக்கும் நிலையில் இன்றே அதன் படப்பிடிப்புகளும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லாவும் சிவனும் சேர்ந்து உங்க மூலமா ஏதோ நடக்கனும்ன்னு நினைக்கிறாங்க: 'மாநாடு' டிரைலர்

முதலமைச்சரை கொலை செய்ய போகிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சிம்பு அவரை காப்பாற்ற முயற்சிக்கும் கதைதான் 'மாநாடு' என்பது இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரியவருகிறது. 

'உச்சந்தலை ரேகையிலேயே': மிஷ்கினின் 'பிசாசு 2' பாடல் ரிலீஸ்!

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா நடிப்பில், உருவாகிவரும் 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன