நயன்தாராவை பாராட்டிய சமந்தா! ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,July 11 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தின் டிரைலர் மற்றும் 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சு' சிங்கிள் பாடல் மிகபெரிய ஹிட்டாகியுள்ளது என்பது தெரிந்ததே. கடந்த 5ஆம் தேதி வெளியான இந்த டிரைலரை இதுவரை சுமார் 38 லட்சம் பேர் யூடியூபில் கண்டுகளித்துள்ளனர். அதேபோல் சிங்கிள் பாடல்களை பார்த்தவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியை தாண்டிவிட்டது.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் 'கோலமாவு கோகிலா' படத்தின் டிரைலருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 'இந்த பாராட்டு கொஞ்சம் தாமதம் தான் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் 'கோலமாவு கோகிலா' படத்தின் டிரைலர் அபாரமாக உள்ளாது. இந்த படத்தை திரையில் காண ஆர்வத்துடன் உள்ளேன். இந்த படத்தின் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக நயன்தாராவின் தைரியத்தை பாராட்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

போதை பொருள் கடத்தல் குறித்த கதையம்சம் உள்ள இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்லின், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

More News

பேரறிவாளன் விடுதலை குறித்து ரஞ்சித்திடம் ராகுல் கூறிய முக்கிய தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன் உள்பட 7 பேர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தியை சந்தித்த ரஜினி பட இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

பிரஸ் மிட் இல்லை, ஆடியோ விழா இல்லை: அதீத நம்பிக்கையில் 'தமிழ்ப்படம் 2' குழு

ஒரு திரைப்படம் எத்தனை கோடியில் தயாராகி இருந்தாலும் அந்த படத்தின் புரமோஷனே வெற்றிக்கு முதல் காரணமாக உள்ளது.

சென்னை திரும்பினார் ரஜினி: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில நாட்களாக டார்ஜிலிங் பகுதியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

'2.0' ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் '2.0'.