வாழ்த்து கூறிய சமந்தாவுக்கு நன்றி கூறிய சூர்யா!

  • IndiaGlitz, [Monday,April 11 2022]

நடிகர் சூர்யாவுக்கு நடிகை சமந்தா வாழ்த்து கூறிய நிலையில் சமந்தாவுக்கு தனது நன்றியை சூர்யா சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.

சூர்யா தயாரிப்பில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் நடித்துள்ள ’ஓ மை டாக்’ திரைப்படம் வரும் 21ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் சற்று முன்னர் ’ஓ மை டாக்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் ஒரு சிறுவனுக்கும் அவன் ஆசையாய் வளர்க்கும் நாய் குட்டிக்கும் உள்ள பந்தம், அந்த நாய்க்குட்டியை சிறுவனிடம் இருந்து பிரிக்க செய்யும் சதி மற்றும் தந்திரம் ஆகிய காட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் இந்த டிரைலரை பார்த்த நடிகை சமந்தா தனது சமூக வலைதளத்தில் ’ஒரு நட்பை மிகவும் அழகாக கூறிய படம்’ என்றும் கூறி தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இந்த வாழ்த்துக்கு நன்றி என சூர்யாவுக்கு சொந்தமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயகுமார், அருண்விஜய், அர்னவ் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் நடித்துள்ள இந்த படம் சரத் சண்முகம் இயக்கத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

More News

'நானே வருவேன்' படத்தின் மாஸ் அப்டேட்டை கூறிய தனுஷ்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' மற்றும் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகிவரும் 'வாத்தி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

கணவரின் பிறந்த நாளில் மகிழ்ச்சியான விஷயத்தை கூறிய சூர்யா-கார்த்தி நாயகி!

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகை தனது கணவரின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியை கூறியுள்ளார் .

'தளபதி 66' படத்திற்காக பிரமாண்ட செட்: எங்கே தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் பிரம்மாண்டமான மால் செட்டில் தான் நடந்தது என்பதும் தெரிந்ததே

ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது சரிதான்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் நாடு முழுவதற்கும் ஹிந்தி தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த

அஜித் படத்தில் கவின் இணைவது உண்மையா? படக்குழுவினர் விளக்கம்

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கும் 'அஜித் 61' படத்திலும் அஜீத் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் 'அஜித் 62' படத்திலும் கவின் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் இணையதளங்களில் கசிந்து வரும் நிலையில்