சத்குரு கண்ணசைத்தவுடன் சமந்தா ஆடிய டான்ஸ்: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Friday,June 17 2022]

சத்குரு கண்ணசைத்தவுடன் சமந்தா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

ஜக்கிவாசுதேவ் கடந்த சில நாட்களாக மண் வளத்தை காப்போம் என்ற குறிக்கோளுடன் பைக்கில் பயணம் செய்து வருகிறார் என்பதும் அவரது இந்த பயணத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் வந்த சத்குரு ஜக்கி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார் என்பதும், சமந்தா கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு ஜக்கி பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் போட்டோசூட்டின் போது சத்குரு லேசாக கண்ணை காட்ட உடனே சமந்தா Save Soil என்ற பதாகையுடன் நடனமாடினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா ஒவ்வொரு ஆண்டும் கோவையில் சத்குரு நடத்தும் சிவராத்திரி விழாவின்போது தவறாமல் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளையராஜா கச்சேரியில் வடிவேலு: வைரலாகும் செம வீடியோ

இசையுலகில் கின்னஸ் சாதனை செய்த இசைஞானி இளையராஜா தற்போதைய இளம் இசையமைப்பாளர்களுக்கு இணையாக பல திரைப் படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

'தளபதி 67' படத்தை அடுத்து மாஸ் நடிகருடன் இணையும் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்,

அடுத்தடுத்து இரண்டு முறை விஜய்யுடன் இணையும் பிரபுதேவா: ரசிகர்களுக்கு செம விருந்து!

தளபதி விஜய்யுடன் அடுத்தடுத்து இரண்டு முறை பிரபுதேவா இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதை உறுதி செய்துள்ளது.

500 எடுத்தால் 2500: ஏடிஎம் மையத்தில் குவிந்த பொதுமக்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் 500 ரூபாய் எடுத்தால் 2500 ரூபாய் வருவதாக வெளி வந்த தகவலை அடுத்து அந்த ஏடிஎம் மையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வாயில் பரோட்டாவுடன் உயிரிழந்த தொழிலாளி: விஜய் அலுவலகத்தில் பரபரப்பு

நடிகர் விஜய் அலுவலகத்தில் வாயில் புரோட்டாவுடன் ஒரு தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.