close
Choose your channels

பாலிவுட்டில் என்ட்ரி ஆகும் சமந்தா.. முதல் படமே மாஸ் நடிகருக்கு ஜோடியா?

Sunday, June 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா பாலிவுட்டில் என்ட்ரி ஆக போவதாகவும் முதல் படமே அவர் மாஸ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உட்பட பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் நடித்துள்ள சமந்தா, தெலுங்கு திரையுலகிலும் பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் பாலிவுட்டில் உருவாகும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’டங்க்கி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த படத்தில் தான் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவொரு அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். மேலும் சில பாலிவுட் வெப்தொடரிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக அவர் நாயகியாக பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் உட்பட பல தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட்டில் நடித்து வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் சமந்தாவும் இணைந்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment
Comment