சர்ச்சைக்குரிய படத்திற்கு சமந்தா பெற்ற விருது: குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Friday,December 10 2021]

சமந்தா நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமேசானில் வெளியான நிலையில் இந்த தொடருக்கு ஒரு சில அமைப்புகளால் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொடரில் சிறப்பாக நடித்ததற்காக சமந்தாவுக்கு பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து பிலிம்பேர் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில், ‘தி ஃபேமிலிமேன் தொடர்’ தொடரில் நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து சமந்தா தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து கூறியதாவது: பிலிம்பேர் விருதுக்காக எனக்கு வாக்களித்த ஒவ்வொருவருக்கும் நன்றி என்றும் நீங்கள் என்னை ஒரு மகிழ்ச்சியாக பெண்ணாக மாற்றி விட்டீர்கள் என்றும் எனக்கு இந்த சிறந்த கேரக்டரை வழங்கிய இயக்குனருக்கும் இதை வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜி என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்றும் இந்த கேரக்டருக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வசனத்தையும் நான் பேசியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது என்றும் நான் சிறப்பாக நடிக்க உதவி செய்த மனோஜ் பாஜ்பாய் சார் அவர்களுக்கும் எனது நன்றி என்றும் நீங்கள் இல்லாமல் இந்த விருது எனக்கு கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி’ என்றும் தெரிவித்துள்ளார்.

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பூஜா ஹெக்டே வீடியோ!

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டேவின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

'டான்' படத்தின் சூப்பர் அப்டேட்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் தற்போது குஷியில் உள்ளனர்.

டிரம்ஸ் வாசிக்கும் விஜய்: புகைப்படத்தின் பின்னணி இதுதான்!

கடந்த சில மணி நேரங்களாக விஜய் டிரம்ஸ் வாசிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த புகைப்படத்தின் பின்னணியில் நெல்சன் உள்பட படக்குழுவினர் உள்ளனர்

தோனி 100 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கு… நிராகரிக்க கோரிய மனுவில் நீதிபதி அதிரடி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற

திருமணத்திற்கு பின் காத்ரீனா கைஃபின் உணர்ச்சிகரமான முதல் பதிவு!

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நேற்று நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே