close
Choose your channels

'தி பேமிலிமேன் 2' தொடரில் நடிக்க சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Wednesday, June 9, 2021 • தமிழ் Comments

மனோஜ் பாஜ்பாய், சமந்தா, ப்ரியாமணி உள்பட பலர் நடித்த வெப்தொடர் ’தி பேமிலிமேன் 2’ சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடர் பெரும்பாலான ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமந்தா நடித்த கேரக்டருக்கு வாழ்த்துக்களும் எதிர்ப்புகளும் மாறி மாறி பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’தி பேமிலிமேன் 2’ வெப்தொடருக்கு நடிகை சமந்தா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த வெப்தொடருக்காக சமந்தா 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு ரூபாய் 1 கோடி முதல் ஒன்றரை கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கும் நிலையில் ’தி பேமிலிமேன் 2’ தொடருக்காக அதைவிட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மேலும் இந்தத் தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாய்க்கு ரூபாய் 10 கோடி சம்பளம் என்றும் ப்ரியாமணிக்கு ரூபாய் 80 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Get Breaking News Alerts From IndiaGlitz