சமந்தா உடலில் நாகசைதன்யா டாட்டுக்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Friday,October 22 2021]

பிரபல நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள நிலையில் அவரது உடலில் மூன்று டாட்டுக்கள் இருப்பதாகவும் அந்த டாட்டுக்கள் அனைத்துமே நாக சைதன்யாவை குறிப்பதாகவும் எனவே அவற்றை அவர் அழிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது

சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் காதலித்துக் கொண்டிருந்த போது காதலியின் வெளிப்பாடாக சமந்தா ஒரு டாட்டூவை பதிவு செய்தார். கையின் மணிக்கட்டில் பதிவு செய்த இந்த டாட்டுவின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்து சமந்தா தனது இடுப்பில் ஒரு டாட்டூவை பதிவு செய்தார் அந்த டாட்டூ சமந்தா மற்றும் நாக சைதன்யா முதன் முதலாக ஒரு படத்தில் இணைந்து குறிப்பிடும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக கழுத்தின் பின்புறத்தில் ஒரு டாட்டூவை பதிவு செய்தார். திருமணத்திற்கு பிறகு தனது அன்பின் வெளிப்பாடாக இந்த டாட்டூவை அவர் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று டாட்டூக்களும் நாகசைதன்யாவை தொடர்புபடுத்தி வரும் நிலையில் தற்போது இருவரும் பிரிந்து உள்ளதால் சமந்தா அந்த டாட்டூக்களை அழிக்க முன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமந்தா தனது விவாகரத்து  முடிவை அறிவித்த பிறகு இந்த டாட்டூக்களின் புகைப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.