close
Choose your channels

சமந்தாவின் 'யசோதா' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Tuesday, December 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தா நடித்த ‘யசோதா’ திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே.

உலகம் முழுவதும் ‘யசோதா’ திரைப்படம் ரூபாய் 30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட ஒரு படம் இந்த அளவு வசூல் செய்வது பெரும் சாதனை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘யசோதா’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘யசோதா’ திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வாங்கிய நிலையில் இந்த படத்தை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் அமேசான் ஓடிடியில் டிசம்பர் 9 முதல் ரசிகர்கள் ‘யசோதா’ படத்தை பார்த்து மகிழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.