close
Choose your channels

படப்பிடிப்பு தளத்தில் திருடி, மாட்டி கொண்ட சமந்தா: வைரல் வீடியோ

Friday, March 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தா திருடி, மாட்டிக் கொண்ட வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்போது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து ’யசோதா’ மற்றும் ‘ஷாகுந்தலம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் படப்பிடிப்பின் போது அவர் ஒரு மசால் வடையை நைசாக எடுக்க முயற்சிப்பதும் அவருடைய கையை ஒருவர் தட்டிவிடுவதுமான காட்சியின் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் ’செட்டுக்கு சொந்தமான உணவை வெளிப்படையாக திருடக் கூடாது’ என்றும் அவர் காமெடியாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.