close
Choose your channels

யாரெல்லாம் இதை பார்த்தவுடன் Rotate செய்தது? சமந்தா புகைப் படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை யாரெல்லாம் Rotate செய்து பார்த்தது என்று போன்ற கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் அவர் தற்போது விஜய் தேவரகொண்டா உடன் ’குஷி’ என்ற திரைப்படத்திலும் ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ஒரு ஹாலிவுட் தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவுக்கு 27 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவரது பதிவுகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு உள்ளனர். புல்தரையில் படுத்து கொண்டு கொண்டு ஹாலிவுட் நடிகை ஸ்டைலில் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த புகைப்படம் தலைகீழாக இருக்கும் நிலையில் யாரெல்லாம் போனை Rotate செய்து பார்த்தது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இந்த புகைப்படம் பதிவு செய்த ஒரு சில மணி நேரத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான லைஃக்களும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.