சமந்தா - ராஜ் காதல் வதந்தி.. மேனேஜர் கொடுத்த விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் என்பவரை திருமணம் செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை சமந்தா நடித்த "சிட்டாடல்" என்ற வெப் தொடரை இயக்கிய இயக்குநர் ராஜ், என்பவருடன் தொடர்புபடுத்தி அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ராஜ் தோளில் சாய்ந்தவாறு சமந்தா எடுத்த புகைப்படம் தான் காதல் வதந்திக்கு வலுசேர்த்தது.
இயக்குநர் ராஜ் ஏற்கனவே தனது மனைவி சியாமளா என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து செய்த நிலையில், தற்போது அவர் சமந்தாவை திருமணம் செய்யப் போவதாகவும், இருவரும் மும்பையில் ஒரு வீடு பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சமந்தாவின் மேனேஜர் இது குறித்து விளக்கம் அளித்த போது, சமந்தாவின் காதல் தொடர்பான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், அதில் உண்மை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் ஆகிய இருவரின் காதல் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் சமந்தா "சுபம்" என்ற திரைப்படத்தை தயாரித்த நிலையில், அந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
New destination unlocked: JAPAN! 🇯🇵✨ #TouristFamily continues its worldwide adventure, reaching audiences further than ever. Tickets open this weekend — don’t miss the TAMIL FILM OF THE YEAR! 🙌
— Ahimsa Entertainment (@ahimsafilms) May 15, 2025
Worldwide release (excl. India) by @vithurs_ ♥️@MillionOffl @Yuvrajganesan… pic.twitter.com/XYw1hWBQvB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com