மாலத்தீவில் மாஸ் போஸ்: சமந்தாவின் உச்சகட்ட கவர்ச்சி!
திருமணத்திற்கு பின்னரும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே நடிகை சமந்தா தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற சமந்தா, அங்கிருந்து மாலத்தீவின் அழகிய இயற்கை காட்சிகளுடன் கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்
அவருடைய ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் லைக்ஸ்கள், கமெண்டுஸ்கள் குவிந்து வரும் நிலையில் சற்று முன் அவள் வெள்ளை உடையில் தேவதை போல் உடை அணிந்து ஒரு உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்
மாலத்தீவில் மாஸ் போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இன்னொரு பதிவில் கண் போன்ற அமைப்பு உள்ள ஒரு கூட்டில் உட்கார்ந்து கொண்டு அவர் கொடுத்துள்ள போஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்கவுள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது