close
Choose your channels

'விக்ரம்' அடுத்த படத்தை இயக்குவது சமந்தா பட இயக்குனரா?

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை சமந்தா படத்தை இயக்கிய இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் அதே போல் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ அடுத்த மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பவன்குமார் ஏற்கனவே ’யூ டர்ன்’ படத்தை இயக்கியிருந்தார் என்பதும், சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பவன்குமார் தற்போது பகத்பாசில் நடித்து வரும் படத்தை இயக்கி வரும் நிலையில் இப்படத்தை முடித்தவுடன் அவர் விக்ரம் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.