சமந்தா-நாகசைதன்யா, இமான்-மோனிகா, தனுஷ்-ஐஸ்வர்யா: திரையுலக பிரபலங்களின் திருமண முறிவுகள்

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் தினமும் நூற்றுக்கணக்கான திருமண முறிவுகள் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போதிலும் திரையுலக பிரபலங்களின் திருமண முறிவுகள் மட்டும் வெளிச்சத்துக்கு வந்து ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் சமந்தா - நாக சைதன்யா, சுஷ்மிதாசென் -ரோஹ்மான், அமீர்கான் - கிரண் ராவ் மற்றும் டி.இமான் - மோனிகா உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் தங்களது திருமண பந்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்த நிலையில் தற்போது அந்த பட்டியலில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியும் இணைந்து உள்ளனர்

பிரபல நடிகையான சமந்தா மற்றும் நாக சைதன்யா ஒருமித்த தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பிரிந்து கொள்வதாக அறிவித்தனர். அதேபோல் அமீர்கான் - கிரண்ராவ், டி. இமான் - மோனிகா, விஷ்ணு விஷால் - ரஜனி உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் சமீபத்தில் விவாகரத்து செய்தவர்களின் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென நேற்று தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் 18 ஆண்டுகால திருமண பந்தமும் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

திருமண முறிவு என்பது தம்பதிகள் இருவருக்குமே எவ்வளவு பெரிய வலியான நிகழ்வு என்பது தெரிந்ததுதான். ஆனால் அதையும் மீறி திரையுலக பிரபலங்கள் அந்த முடிவை எடுத்து உள்ளார்கள் என்றால் அது அவர்களது தனிப்பட்ட விவகாரம் என்பதை மனதில் கொண்டு அவர்களது முடிவுக்கு மதிப்பளிப்பது ரசிகர்களின் கடமையாக கருதப்படுகிறது.

More News

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம்

தனுஷ் விவாகரத்து அறிவிப்புக்கு செளந்தர்யா ரஜினியின் ரியாக்சன்!

பிரபல நடிகர் தனுஷ் நேற்று தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஐஸ்வர்யாவை பிரிகிறேன்: தனுஷ் எடுத்த திடீர் விவாகரத்து முடிவு:

 பிரபல நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

பதவி விலகிய கோலிக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்... என்ன செய்தார் தெரியுமா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியில் இருந்து விராட் கோலி பதவி விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து

இயக்குனர் சங்க தேர்தல் திடீர் ஒத்திவைப்பு: காரணம் இதுதான்!

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்தல் தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.