close
Choose your channels

மகளிர் தினத்தில் சமந்தா எடுத்து கொண்ட சவால்: வைரலாகும் புகைப்படம்!

Sunday, March 7, 2021 • தமிழ் Comments

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மகளிர்களுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவியும் என்பதும் மகளிர்கள் இந்த தினத்தில் புதிய சவால்களை எடுத்துக்கொண்டு அந்த ஆண்டில் அந்த சவாலை நிறைவேற்ற தீவிர முயற்சி எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் நாளை உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா இந்த மகளிர் தினத்தில் ஒரு புதிய சவாலை எடுத்துக் கொண்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது. நம்முடைய மதிப்பை அறிந்து ஒருபோதும் அதற்கு குறைவான தகுதியுள்ளதை அனுமதிக்க கூடாது.

இந்த சர்வதேச மகளிர் தினத்தில் நான் எடுத்து கொள்ளும் சவால் என்னவெனில், என்னை நானே மேலும் நம்ப போகிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எந்த ஒரு செயலும் மாற்றலும் உங்களிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் ஒரு கவர்ச்சி புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பதும், அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’காத்து வாக்கில ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Get Breaking News Alerts From IndiaGlitz