சமந்தாவின் வெளிவராத ஜாலியான திருமண வீடியோ

  • IndiaGlitz, [Monday,June 11 2018]

கோலிவுட் திரையுலகில் திருமணத்திற்கு பின்னரும் நாயகியாக நடித்து வெற்றி படம் கொடுக்க முடியும் என்று நிரூபித்த நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னர் சமந்தா நடிப்பில் வெளிவந்த 'ரங்கஸ்தலம்', 'இரும்புத்திரை' மற்றும் நடிகையர் திலகம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றன.

மேலும் அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் நடித்து வரும் 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் 'யூடர்ன்' ரீமேக் ஆகிய படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தாவின் திருமண வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜாலியான மூடில் உள்ள காட்சிகளும் நாகார்ஜூன் உள்பட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக உள்ள தருணங்கள் குறித்த காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.