'தி ஃபேமிலிமேன் 2' விவகாரம்: மன்னிப்பு கேட்டார் சமந்தா

  • IndiaGlitz, [Thursday,August 26 2021]

பிரபல நடிகை சமந்தா நடித்த ’தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்தப் வெப்தொடர் மிகப் பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது என்பதும் சமந்தாவுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை சமந்தா இதுகுறித்து கூறிய போது ’’தி ஃபேமிலிமேன் 2’ வெளியாகும் முன்பு வந்த கண்டனம் அந்த தொடர் வெளியான பிறகு நின்று விட்டது போல் தான் எனக்கு தெரிகிறது. இருப்பினும் நான் அந்த கேரக்டரில் நடித்ததை வெறுப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காக நான் உண்மையாகவே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு சிறிதும் இல்லை. நான் அந்த தொடரில் உள்ள ராஜி என்ற கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். எனது பங்கு அது மட்டும் தான். இருப்பினும் அந்த கேரக்டரால் யாராவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த பட ஹீரோ இவரா?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மாறன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

சிம்பு மீதான ரெட் கார்ட் குறித்து தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு!

சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் விதித்து இருந்ததை அடுத்து தற்போது அந்த ரெட் கார்ட் மீது தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஹைக்கூ கவிதையுடன்....! அப்பா ஆன நெகிழ்வை பதிவிட்ட பிரபல சீரியல் நடிகர்....!

சன் தொலைக்காட்சியில் வெளியான வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகர் சசிந்தர்

கேப்டன் என்பது ஒரு மந்திரசொல்: விஜய்காந்த் குறித்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா

கேப்டன் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் 'சார்பாட்டா பரம்பரை': ரசிகர்கள் மகிழ்ச்சி

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது