தற்காலிகமாக குடியிருப்பு இடத்தை மாற்றிய சமந்தா: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,March 17 2022]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்காலிகமாக தனது குடியிருப்பு இடத்தை மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகை சமந்தா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ’யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற ஸ்டேட் போடப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் இயக்குனர்கள் இரவு பகலாக இந்த படத்தின் பணிகளில் இருக்கும் நிலையில் சமந்தாவும் இந்த படத்தில் ஒன்றிப் போய் உள்ளார் என்றும் அதற்காகவே தனது இருப்பிடத்தை படப்பிடிப்பு தளமான 5 நட்சத்திர செட்டுக்கு தற்காலிகமாக மாற்றி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் மூன்று மாதங்களுக்கு ’யசோதா’ படப்பிடிப்பில் எளிதீல் கலந்து கொள்வதற்காக அவர் பைவ் ஸ்டார் ஹோட்டல் செட்டில் தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.

சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பதும் மணிசர்மா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஹரிசங்கர் மற்றும் ஹரிஷ் இயக்கி வருகின்றனர்.

More News

புடினை “சைக்கோ“ என விமர்சித்த மாடல் அழகி.. சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

ரஷ்யாவில் பிரபல மாடல் அழகியாக வலம்வந்த ஒரு பெண் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை “சைக்கோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்“

எனக்கு ஒரு செயற்கை கையை பொருத்த முடியுமா? கண்கலங்க வைத்த உக்ரைன் சிறுமி!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய இராணுவம் 22 நாட்களைக் கடந்த பிறகும் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு

குக் வித் கோமாளி தாமு செஞ்ச காரியத்தை பார்த்திங்களா? வைரல் வீடியோ

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருக்கும் தாமு, அரபி குத்து பாடலுக்கு செம டான்ஸ் ஆடி உள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

வெற்றிமாறனின் உதவி இயக்குனராக இணைந்த முன்னாள் தமிழக எம்.எல்.ஏ!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றி மாறனிடம் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் உதவி இயக்குனராக இணைந்து உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது .

விஜய், அஜித் இருவரும் சேர்ந்தார் போல் இருக்கிறார் விஜித்: தங்கர்பச்சானின் டக்குமுக்கு திக்கு தாளம் இசை விழா

பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க,  தங்கர்பச்சான் இயக்கத்தில் டக்கு முக்கு டிக்குதாளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட