தில் ராஜூவுடன் படம் பார்த்த சமந்தா.. படம் முடிந்தவுடன் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Tuesday,March 14 2023]

நடிகை சமந்தா தான் நடித்த திரைப்படத்தை இயக்குனர் குணசேகரன் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுடன் படம் பார்த்துவிட்டு படம் முடிந்தவுடன் இருவரையும் கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடிகை சமந்தா, தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் இயக்குனர் குணசேகரன் ஆகிய இருவருடன் ‘சாகுந்தலம்’ படம் பார்த்தார். இதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள சமந்தா, ‘ கடைசியாக இன்று நான் ’சாகுந்தலம்’ திரைப்படத்தை பார்த்தேன். இயக்குனர் குணசேகரன் அவர்கள் இடம் என் இதயமே சென்று விட்டது. என்ன ஒரு அழகான திரைப்படம். நம் மிகப்பெரிய காவியங்களில் ஒன்றை அவர் கண்முன் உயிர்ப்பித்துள்ளார். குடும்ப பார்வையாளர்கள் இந்த படத்திற்கு நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

குழந்தைகளாக நீங்கள் அனைவரும் இந்த மாயாஜால உலகத்தை விரும்பி பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். தில் ராஜு மற்றும் நீலிமா குணசேகர் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க எனக்கு அற்புதமான வாய்ப்பளித்ததற்கு நன்றி, ‘சாகுந்தலம்’ என்றென்றும் என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
 

More News

'என்ன ஆனாலும் சரி, மொத்த பேரையும் கொத்தா தூக்கிருவேன்': நானி, கீர்த்தி சுரேஷின் 'தசரா' டீசர்..!

 பிரபல தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி

ரூ.80 கோடி செலவு செய்து ஆஸ்கர் விருது பெறப்பட்டதா? 'நாட்டு நாட்டு' பாடல் குறித்து பிரபல இசையமைப்பாளர்..

ஒவ்வொரு முறையும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்கர் விருது பெறும்போது உலகமே அந்த நபரை பாராட்டினாலும் ஒரு சிலர் மட்டும் அந்த பாராட்டிற்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்து வருவார்கள்.

'அரண்மனை 4: சுந்தர் சி தங்கையாக இந்த பிரபல நடிகையா?

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' 'அரண்மனை 2' மற்றும் 'அரண்மனை 3' திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது 'அரண்மனை' படத்தின் நான்காம் பாகத்தின்

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்..!

 உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த விவரங்கள்

டான்ஸ் ஆடும்போது குறுக்கே வந்த ஹீரோ, கடுப்பான கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ..!

 நடிகை கீர்த்தி சுரேஷ் ஆர்வத்துடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது ஹீரோ ஒருவர் குறுக்கே வந்ததை அடுத்து கடுப்பான அவர் அவரை பிடித்து தள்ளிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.