கண்மணி இல்லாமல் கதீஜா இல்லை, கதீஜா இல்லாமல் கண்மணி இல்லை: சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி உடன் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்து விட்டது. இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் வரும் என்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த நடிகை சமந்தா, ‘விக்னேஷ் சிவனின் இந்த படத்தை மிகவும் அருமையாக உருவாக்கி உள்ளார் என்றும் அவரது ஆத்மா மற்றும் இதயம் முழுவதும் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் என்றும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்

மேலும் தான் இந்த படத்தில் கதீஜா என்ற கேரக்டரில் நடித்து இருப்பதாகவும் தனது கேரக்டர் காமெடி மட்டும் ரொமான்ஸ் கலந்த கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் எனது திரையுலக வாழ்வில் மிகவும் புதியது என்றும் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் ஏப்ரல் 28-ஆம் தேதி இந்த படத்தை திரையில் பாருங்கள் என்றும் அவர் கூறினார்

மேலும் இந்த படத்தில் நயன்தாரா, கண்மணி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்றும், நான், கதீஜா என்ற கேரக்டரில் நடித்து உள்ளேன் என்றும் இந்த படத்தை பொருத்தவரை கண்மணி இல்லாமல் கதீஜா இல்லை என்றும், கதீஜா இல்லாமல் கண்மணி இல்லை என்றும் ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு சமந்தா பதிலளித்தார்.

More News

சமந்தாவை கட்டிப்பிடித்து உணர்ச்சி வசப்பட்ட நயன்தாரா: வைரல் வீடியோ

விஜய் சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

வெள்ளியை அடுத்து தங்கப்பதக்கம்: நடிகர் மாதவன் மகன் மீண்டும் சாதனை: 

பிரபல நடிகர் மாதவன் மகன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை செய்த நிலையில் தற்போது தங்கப்பதக்கம் வென்ற உள்ளதை அடுத்து அவருக்கு

பார்வையற்றோர்களுக்கு ஆடியோ மூலம் விளக்கும் 'மாயோன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதுவரை இல்லாத அளவில் ஒரு முழு திரைப்படத்தை பார்வையற்றவர்களுக்கு ஒவ்வொரு காட்சியையும் ஆடியோ மூலம் விளக்கும் 'மாயோன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் கட்டாயம் தேவை: அமைச்சர் ரோஜா

தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் கட்டாயம் தேவை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியை திணிக்க கூடாது என்றும் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

'நிலை மறந்தவன்' படத்தில் ஜோதிகா கேரக்டர் ஏன்?  எச் ராஜா விளக்கம்

'நிலை மறந்தவன்' என்ற திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா கேரக்டர்கள் ஏன் என்பது குறித்து பாஜக பிரமுகர் ஹெச் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.