close
Choose your channels

இவ்வளவு சீக்கிரம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை: சமந்தா

Tuesday, September 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை சமந்தா ஒரு பக்கம் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தான் வளர்க்கும் நாய்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய அவர் ‘இவ்வளவு சீக்கிரம் நான் இதை எதிர்பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

நடிகை சமந்தா செல்ல பிராணிகள் வளர்ப்பதில் மிகவும் விருப்பம் உடையவர் என்றும் அந்த வகையில் சமீபத்தில் அவர் ஹாஜி என்ற நாயை வாங்கி வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஷாஷா என்ற நாயை அவர் வளர்த்து வரும் நிலையில் தற்போது இந்த இரண்டு நாய்களும் மிகவும் சகோதர பாசத்துடன் பழகி வருவதாக கூறியுள்ளார்.

இந்த இரண்டு நாய்களும் ஒற்றுமையாக இருப்பதை புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ள சமந்தா, ‘இவ்வளவு சீக்கிரம் இருவரும் சேர்ந்து இருப்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் ஒவ்வொரு நாளும் இந்த நாய்கள் தனக்கு எதையாவது கற்றுக் கொடுத்து வருகின்றன என்றும் பிற நாய்களுடன் சேராத இந்த நாய் இவ்வளவு சீக்கிரத்தில் சக நாயை சகோதரனாக ஏற்றுக் கொண்டதே எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்றும் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.