close
Choose your channels

தோனி சென்னையா? க்யூட்டாக கேள்வி கேட்ட சமந்தா.. வைரல் வீடியோ..!

Friday, May 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தோனி ராஞ்சியை சேர்ந்தவர் என்பதை நம்பவே முடியவில்லை என்றும், அவர் சென்னையை சேர்ந்தவரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என க்யூட்டாக பேட்டியில் நடிகை சமந்தா கூறிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த ’குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சமந்தா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் சென்னை சூப்பர் கிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க.. நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க.. என்று பாட்டு பாடினார் அதுமட்டுமின்றி அவர் தோனிக்காக ஒரு விசில் அடித்தார்.

மேலும் தோனியை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் ராஞ்சியா? சென்னையா? என்று எனக்கு பல சமயம் சந்தேகமாக இருக்கும் என்றும் அந்த அளவுக்கு அவர் சென்னை மக்களோடு ஒன்றிப்போய்விட்டார் என்றும் கூறினார். அவரது பதில் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.