தளபதி விஜய் போலவே முயற்சி செய்த சமந்தா.. வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் போலவே செல்பி வீடியோ எடுக்க சமந்தா முயற்சி செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில், ரசிகர்கள் கூட்டத்தினரை திருப்தி செய்வதற்காக, அவர்களுடன் சேர்ந்து செல்பி புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார். அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது தெரிந்ததே. குறிப்பாக, அவர் நெய்வேலியில் எடுத்த செல்பி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் நடிகை சமந்தா ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது, அங்கு கூடியிருந்த ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் செல்பி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், பலர் "விஜய் போலவே சமந்தாவும் செல்பி வீடியோவை முயற்சித்துள்ளார்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோவை விஜய்யின் ’லியோ’ ‘மாஸ்டர்’ ‘ஜனநாயகன்’ படங்களின் இணை தயாரிப்பாளரும், ‘மகாராஜா’ படத்தின் தயாரிப்பாளரான ஜெகதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Our very own dazzling @Samanthaprabhu2 in Sydney for the store opening of @saashrijeweller ♥️
— TheRoute (@TheRoute) March 23, 2025
Happy to be associated with @saashrijeweller #TheRouteTalent #SamanthaRuthPrabhu pic.twitter.com/LQBqUtKOv8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments