11 வருஷம்- ரசிகர்ளுக்கு மகிழ்ச்சி செய்தியுடன் நடிகை சமந்தா வெளியிட்ட வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

துறுதுறு நடிப்பால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடி கட்டி பறக்கும் நடிகை சமந்தா, சினிமாவில் தனது 11 ஆவது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறார். அதோடு இந்த நாளில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையும் அவர் பதிவிட்டு உள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு “மாஸ்கோவின் காவிரி“ திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்து இருந்தாலும் அந்தப் படம் திரைக்கு வர வெகுநாள் பிடித்தது. பின்னர் தெலுங்கில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஏ மாயா சேசவா”. இந்தப் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சமந்தா. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு தெலுங்கில் பல முக்கிய இயக்குநர்களின் படங்களும் ஒப்பந்தமாகின.

அந்த வகையில் “பிருந்தாவனம்“, “தூக்குடு“, “சீத்தம்ம வாக்கிட்டிலோ சிரிமல்லி செட்டு“ “அத்தாரிண்டிகி தாரேதி“ எனப் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடிகை சமந்தா நடித்து இருந்தார். அதையடுத்து தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து “கத்தி“, “தெறி“, “மெர்சல்“ என 3 வெற்றிப்படங்களில் நடித்து இருக்கிறார். அதேபோல நடிகர் சூர்யாவுடன் “24“, நடிகர் சிவக்கார்த்திகேயனுடன் “சீம ராஜா“, நடிகர் விக்ரமுடன் “பத்து என்றதுக்குள்ள“, நடிகர் தனுஷ்ஷுடன் என தமிழில் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிகை சமந்தா நடித்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 2010 இல் “ஏ மாயா சேசவா” படத்தில் இருந்து தற்போதுவரை சினிமா துறையில் தன்னுடைய 11 ஆண்டுகளை நடிகை சமந்தா நிறைவு செய்து இருக்கிறார். இதற்காக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவை ஒட்டி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் நடிகை சமந்தாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.