11 வருஷம்- ரசிகர்ளுக்கு மகிழ்ச்சி செய்தியுடன் நடிகை சமந்தா வெளியிட்ட வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

துறுதுறு நடிப்பால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடி கட்டி பறக்கும் நடிகை சமந்தா, சினிமாவில் தனது 11 ஆவது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறார். அதோடு இந்த நாளில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவையும் அவர் பதிவிட்டு உள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு “மாஸ்கோவின் காவிரி“ திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்து இருந்தாலும் அந்தப் படம் திரைக்கு வர வெகுநாள் பிடித்தது. பின்னர் தெலுங்கில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஏ மாயா சேசவா”. இந்தப் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை சமந்தா. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவருக்கு தெலுங்கில் பல முக்கிய இயக்குநர்களின் படங்களும் ஒப்பந்தமாகின.

அந்த வகையில் “பிருந்தாவனம்“, “தூக்குடு“, “சீத்தம்ம வாக்கிட்டிலோ சிரிமல்லி செட்டு“ “அத்தாரிண்டிகி தாரேதி“ எனப் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடிகை சமந்தா நடித்து இருந்தார். அதையடுத்து தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து “கத்தி“, “தெறி“, “மெர்சல்“ என 3 வெற்றிப்படங்களில் நடித்து இருக்கிறார். அதேபோல நடிகர் சூர்யாவுடன் “24“, நடிகர் சிவக்கார்த்திகேயனுடன் “சீம ராஜா“, நடிகர் விக்ரமுடன் “பத்து என்றதுக்குள்ள“, நடிகர் தனுஷ்ஷுடன் என தமிழில் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிகை சமந்தா நடித்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 2010 இல் “ஏ மாயா சேசவா” படத்தில் இருந்து தற்போதுவரை சினிமா துறையில் தன்னுடைய 11 ஆண்டுகளை நடிகை சமந்தா நிறைவு செய்து இருக்கிறார். இதற்காக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவை ஒட்டி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் நடிகை சமந்தாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

More News

தமிழகத்தில் தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

தமிழகத்தில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

கறுப்புநிற உடையிலும் இத்தனை பளபளப்பா? வைரலாகும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படம்!

திரைப்பட நடிகை, பின்னணி பாடகி எனப் பன்முகத் திறமைகளை கொண்ட நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி இடத்தை வகித்து வருகிறார்.

நிரஞ்சனி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி பிரபலம்: வைரல் வீடியோ

பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் மூன்றாவது மகள் நிரஞ்சனி நேற்று இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே.,

'வேற லெவல் தலைவி': ஷிவானியின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்ஸ்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவருக்கு இரண்டு மில்லியனுக்கும்

சென்னை சிஎஸ்கே மீது கடும் கோபத்தில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன்! என்ன காரணம்?

அகமதாபாத் மோதேரா மைதானத்தில் கடந்த 24 ஆம் தேதி துவங்கிய 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றிப் பெற்றுள்ளது.