close
Choose your channels

'தி ஃபேமிலிமேன் 2' வெற்றி எதிரொலி: நயன்தாராவை மிஞ்சிய சமந்தாவின் சம்பளம்?

Monday, June 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான சமந்தா நடித்த ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது என்பது தமிழ் உள்பட அனைத்து மொழி ரசிகர்களும் இந்த தொடருக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சமந்தாவுக்கு ஓடிடி வாய்ப்புகள் தற்போது குவிந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த வெப்தொடரில் சமந்தாவை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதற்காக அந்நிறுவனம் சமந்தாவிற்கு ரூபாய் 8 கோடி சம்பளம் பேசி இருப்பதாகவும் சமந்தா வாங்கும் மிக அதிக சம்பளம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் மிக அதிகமாக சம்பளம் வாங்குபவராக நயன்தாரா இருந்து வரும் நிலையில் ஒரே ஒரு தொடரின் வெற்றி காரணமாக கிட்டத்தட்ட நயன்தாரா சம்பளத்தை விட இரு மடங்கு சம்பளம் வாங்கும் அளவுக்கு சமந்தா முன்னேறி விட்டார் என்று கூறப்படுகிறது. இதேபோல் சமந்தாவை வேறு சில ஓடிடி நிறுவனங்களும் அணுகி வருவதாகவும் அவருக்கு ஓடிடி மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.