சின்மயி கணவருக்கு ஆதரவு தெரிவித்த சமந்தா

  • IndiaGlitz, [Saturday,March 04 2017]

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு அதில் கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டதை பார்த்த்தோம். இந்நிலையில் ஹேக் செய்யப்பட்ட சுசித்ராவின் டுவிட்டர் கணக்கு தற்போது நீக்கப்பட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சனையில் பாடகி சின்மயி குறித்த சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு ஏற்கனவே சின்மயி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவருடைய கணவரும் நடிகருமான ராகுல் தனது மனைவிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். மேலும் சின்மயி மனித நேயம் மிக்கவர் என்றும் மற்றார்களை விட தான் அவரை நன்றாக புரிந்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்நிலையில் பிரபல நடிகையும் சின்மயி தோழிகளில் ஒருவருமாகிய சமந்தா ராகுல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 'நீங்களும் ஆச்சரியத்தக்க மனிதர் தான் என்றும், உங்கள் இருவருக்கும் இந்த பிரச்சனையை கடந்து செல்லும் அளவுக்கு மனவலிமை உண்டு என்றும் சமந்தா தெரிவித்துள்ளார். ராகுலுடன் சமந்தா 'மாஸ்கோவின் காவேரி' என்ற படத்தில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இளையதளபதியின் 'விஜய் 61' படத்தில் ஷங்கர் பட வில்லன்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'விஜய் 61'

ஜி.வி.பிரகாஷின் 'நெடுவாசல்' பாடலின் ஆரம்பம் இதுதான்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இளைஞர்களையும், பொதுமக்களையும் எழுச்சி அடைய வைத்தவைகளில் ஒன்று ஜி.வி.பிரகாஷின் 'இது கொம்பு வச்ச சிங்கமடா' என்ற பாடல் என்றால் அது மிகையாகாது.

சுசித்ராவை பின்னால் இருந்து இயக்குவது யார்?

கடந்த ஒரு வாரமாகவே சுசித்ராவின் டுவிட்டர் மேட்டர் இணையதளங்களில் டிரெண்ட் ஆகிக்கொண்டு வருகிறது.

சுசித்ரா பிரச்சனை குறித்து செல்வராகவன் அளித்த விளக்கம்

சுசித்ராவின் ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் தளம் கோலிவுட் திரையுலகில் ஒரு பிரளயத்தையே உருவாக்கிவிட்ட நிலையில் தற்போது இதில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பிரபலங்கள் தங்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஏப்ரல் 3 முதல் ஹெச்1-பி விசா நிறுத்தம். அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்து நாளொரு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.