close
Choose your channels

பள்ளி நாட்களும், பல்லாவரம் மலையும்: சமந்தாவின் வீடியோ வைரல்!

Monday, March 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தந்தை பள்ளிநாட்களில் பல்லாவரம் அருகே வாழ்ந்த மலரும் நினைவுகளை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாக சைதன்யாவை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டாலும் அவர் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பல்லாவரம் பகுதியில் தான் அவருடைய வீடு இருந்தது என்பதும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கிருந்துதான் அவர் முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று சென்னை வந்த சமந்தா பல்லாவரம் மலையை காரில் செல்லும்போது வீடியோ எடுத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் இதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் எனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து தினமும் இந்த பல்லாவரம் மலையை பார்ப்பேன். எனக்கு ரொம்ப பிடித்த இடம் இந்த மலை. இந்த மலையுடன் நான் பல விஷயங்களை பகிர்ந்துள்ளேன். தேர்வு காலங்களில் நான் அதிகாலையில் எழுந்து ஆர்வமாய் படிக்கும்போதும், கடவுளுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத போதும், என் முதல் காதல், நண்பரின் மரணங்கள் ஆகியவற்றையும் இந்த மலையுடன் நான் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்று தனது தனது பள்ளி கால மலரும் நாட்கள் குறித்து சமந்தா பதிவு செய்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவும் அவர் பதிவு செய்துள்ள வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.