விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தாவுக்கு கிடைத்த ரூ.25 லட்சம்!

  • IndiaGlitz, [Thursday,October 07 2021]

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது அவருக்கு ரூபாய் 25 லட்சம் கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமிதாப்பச்சன் நடத்திய ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சி தமிழ் உள்பட பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் அதேபோல் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை சமந்தா கலந்து கொண்டதாகவும் அவர் இந்த நிகழ்ச்சியில் 25 லட்சம் ரூபாய் வென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சமந்தா கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி வரும் ஆயுத பூஜை தினத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

விவாகரத்து அறிவிப்புக்குப் பின் சமந்தா கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி இதுதான் என்பதும் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கிடைத்ததை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.