ஒரே கேரக்டரில் விஜய்-தனுஷ்

  • IndiaGlitz, [Tuesday,June 13 2017]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர், மேஜிக்மேன் ஆகிய மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் விஜய் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மேஜிக்மேன் கேரக்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படமான 'The Extraordinary Journey Of The Fakir' படத்தில் அவர் மேஜிக்மேன் கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. விஜய், தனுஷ் இருவருமே ஒரே நேரத்தில் வெவ்வேறு படங்களில் மேஜிக்மேன் கேரக்டரில் நடித்து வருவது ஆச்சரியத்தை தந்துள்ளது.

மேலும் விஜய், தனுஷ் ஆகிய இருவருமே எடுத்துக்கொண்ட கேரக்டர்களுக்காக அதிக சிரத்தை எடுத்து நடிப்பவர்கள் என்பதாக் இருவரும் இந்த மேஜிக்மேன் கேரக்டரில் எந்தவிதமான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தவுள்ளனர் என்பதை இரு படங்களும் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.