close
Choose your channels

சமுத்திரக்கனியின் 'கொளஞ்சி' டிரைலரில் அஜித்-விஜய் வசனம்!

Monday, July 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தன்ராம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொளஞ்சி' திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலரில் 'விஜய் போட்டோவை கிழிச்சான்' என்ற விஜய் குறித்த வசனமும், 'தெறிக்க விடலாமா? என்ற அஜித்தின் வசனமும் இடம்பெற்றுள்ளது.

சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்தின் சாயலில் இருக்கும் இந்த படத்தில் 'ஒரு மனிதனை ஒரு மனிதன் அநியாயமாக அடிக்கும் போது அதை இன்னொரு மனிதன் தட்டிக் கேட்பதற்கு, மனிதனாக இருந்தால் போதும் வேறு எந்த சம்பந்தமும் தேவையில்லை.... என்ற சிந்திக்க வைக்கும் வசனமும், 'நல்ல பந்து போடு நண்பா' என்று கூறும் நண்பனிடம் பந்தை காண்பித்து 'அப்ப இது நல்ல பந்து இல்லையா நண்பா? என்று கூறும் காமெடி வசனமும் கவனத்தை பெறுகின்றன.

விஜய்யுடன் ஒருசில படங்களில் நாயகியாக நடித்த சங்கவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவில் அத்தியப்பன் சிவா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒயிட் ஷேடோ புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.