சமுத்திரக்கனியின் 'கொளஞ்சி' டிரைலரில் அஜித்-விஜய் வசனம்!

  • IndiaGlitz, [Monday,July 22 2019]

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தன்ராம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொளஞ்சி' திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிரைலரில் 'விஜய் போட்டோவை கிழிச்சான்' என்ற விஜய் குறித்த வசனமும், 'தெறிக்க விடலாமா? என்ற அஜித்தின் வசனமும் இடம்பெற்றுள்ளது.

சமுத்திரக்கனியின் 'அப்பா' படத்தின் சாயலில் இருக்கும் இந்த படத்தில் 'ஒரு மனிதனை ஒரு மனிதன் அநியாயமாக அடிக்கும் போது அதை இன்னொரு மனிதன் தட்டிக் கேட்பதற்கு, மனிதனாக இருந்தால் போதும் வேறு எந்த சம்பந்தமும் தேவையில்லை.... என்ற சிந்திக்க வைக்கும் வசனமும், 'நல்ல பந்து போடு நண்பா' என்று கூறும் நண்பனிடம் பந்தை காண்பித்து 'அப்ப இது நல்ல பந்து இல்லையா நண்பா? என்று கூறும் காமெடி வசனமும் கவனத்தை பெறுகின்றன.

விஜய்யுடன் ஒருசில படங்களில் நாயகியாக நடித்த சங்கவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். விஜயன் முனுசாமி ஒளிப்பதிவில் அத்தியப்பன் சிவா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒயிட் ஷேடோ புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

More News

ஒரே நேரத்தில் இரண்டு இரட்டை வேட படங்களில் கமல்ஹாசன்?

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள

வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்: விஜய் நாயகியின் கனவு

விஜய் தேவரகொண்டா நடித்த 'டியர் காம்ரேட்' படத்தின் நாயகியான ராஷ்மிகா, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்திலும் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி?

பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி

வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் அதிரடி காட்டும் வனிதா: அதிர்ச்சியில் பிக்பாஸ்

பிக் பாஸ் வீட்டில் வனிதா இருந்தவரை வீட்டில் ஒரே சண்டையும் சச்சரவுமாகவும் இன்னொருபுறம் கலகலப்பாகவும் இருந்தது. ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர்

'கடாரம் கொண்டான்' படத்திற்கு மலேசியாவில் தடை! ஏன் தெரியுமா?

கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது