சமுத்திரக்கனிக்கு கிடைத்த முதல் வெற்றியும் கடைசி சலுகையும்...

  • IndiaGlitz, [Tuesday,May 23 2017]

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி நடைமுறையை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. எனவே ஜூலை 1ஆம் தேதிக்கு பின்னர் எந்த திரைப்படத்திற்கு வரிவிலக்கு சலுகை என்பது இருக்காது. 28% வரி கட்டியே தீர வேண்டும். இந்த நிலையில் ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னர் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை வரிவிலக்கு பெற்று வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமுத்திரக்கனியின் 'தொண்டன்' திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி அதாவது வரும் வெள்ளியன்று வெளியாகிறது. இந்த படத்திற்கு தற்போது தமிழக அரசு 30% வரிவிலக்கு சலுகையை அளித்துள்ளது. சமுத்திரக்கனியின் அடுத்த படம் வெளிவருவதற்குள் ஜிஎஸ்டி அமலாகிவிடும் என்பதால் அனேகமாக வரிச்சலுகை பெறும் சமுத்திரக்கனியின் கடைசி படமாகவும், அதே நேரத்தில் அவருக்கு இந்த படத்தால் கிடைத்த முதல் வெற்றியாகவும் இந்த வரிச்சலுகை பார்க்கப்படுகிறது.
சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் விக்ராந்த், சுனைனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

பிரபல காமெடி நடிகர் மீது போலீசில் புகார் அளித்த மனைவி

பிரபல காமெடி நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான பாலாஜி மீது அவர் மனைவி தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

விரைவில் அதிரடி உத்தரவு வரும். சசிகலாவை சந்தித்த பின் கருணாஸ் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை ஆரம்பத்தில் அதிமுக தலைவர்களும் நிர்வாகிகளும் சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்.

'விஸ்வரூபம் 2' குறித்த முக்கிய தகவல்: கமல் அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம்' திரைப்படம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து கடந்த 2013ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது...

ஜிஎஸ்டி வரி எதிரொலி: ஜூனில் ரிலீசாக குவியும் திரைப்படங்கள்

மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி திட்டத்தை திரைத்துறைக்கும் வழங்கியுள்ளதால் வரும் ஜூலை 1 முதல் திரைத்துறைக்கும் 28% வரி விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது...

விஷாலின் ஆன்லைன் டிக்கெட் திட்டத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டிப்பு

தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் நேற்று சங்கத்தின் சார்பில் ஒரு இணணயதளம் தொடங்கப்படும் என்றும் இனிமேல் அதன் மூலம் மட்டுமே ஆன்லைனில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் இதற்கு அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் பேசியிருந்தார்...