'சண்டக்கோழி 2': கீர்த்தி சுரேஷ் கேரக்டர் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,October 12 2018]

கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் நடிகை கீர்த்திசுரேஷ் தற்போது தளபதி விஜய்யுடன் 'சர்கார்' மற்றும் விஷாலுடன் 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அவரது திரையுலக மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 18ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தில் வெளியாகவுள்ள 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்துள்ள கீர்த்திசுரேஷின் கேரக்டர் 'செம்பருத்தி' என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க பாவாடை தாவணி காஸ்ட்யூமில் கிராமத்து பெண்ணாக கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

விஷால், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.