close
Choose your channels

விஜய் படத்தை கிண்டல் செய்த நடிகர்: ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு பதிலடி!

Sunday, June 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படத்தை கிண்டல் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகரை, தற்போது ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கேலி, கிண்டல் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த மீம்ஸ்களுக்கு நடிகர் பதிலடி கொடுத்துள்ளார்

விஜய் நடித்த ’சுறா’ திரைப்படம் வெளியானபோது அந்த படத்தை கிண்டல் செய்து நடிகர் சந்தீப் கிஷான் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டை வைத்து தற்போது ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த மீம்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சந்தீப் கிஷான் கூறியதாவது:

இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. என்னுடைய வார்த்தைகளை நான் மறுபரிசீலனை செய்ய ஒரு சில கணங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இந்த பதிவை எடுத்து வைத்துக் கொண்டு என்னிடம் எப்போது வேண்டுமானால் கேளுங்கள். அப்போதும் நான் இந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பேன்.

எனக்கு விஜய் அவர்களை மிகவும் பிடிக்கும். அவர் பல கடினமான தருணங்களில் என்னை பலவழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். இதில் வெட்கப்பட ஏதுமில்லை. விஜய் அவர்களின் படங்களை ரசித்தே நான் வளர்ந்தேன். இடைப்பட்ட காலங்களில் ஒரு வழக்கமான சினிமா ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் இன்று கடந்த 10 ஆண்டுகளாக அவருடைய பயணம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று பெருமையுடன் சொல்வேன். இன்று நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்"

இவ்வாறு சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.